தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bakasuran Vs Vaathi: வெல்லப்போவது யார்? ஒரேநாளில் திரையில் மோதும் அண்ணன், தம்பி!

Bakasuran vs Vaathi: வெல்லப்போவது யார்? ஒரேநாளில் திரையில் மோதும் அண்ணன், தம்பி!

Karthikeyan S HT Tamil

Jan 28, 2023, 01:12 PM IST

நடிகர் தனுஷ், செல்வராகவன் என சகோதரர்கள் இருவரும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.
நடிகர் தனுஷ், செல்வராகவன் என சகோதரர்கள் இருவரும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.

நடிகர் தனுஷ், செல்வராகவன் என சகோதரர்கள் இருவரும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்கள் மூலம் கோலிவுட் சினிமாவில் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் 'பகாசூரன்' படத்தை இயக்கியுள்ளார். ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படத்தில் ராதாரவி, கே.ராஜன் , கூல் சுரேஷ், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Director Murali Abbas: வாயை விட்டு வாங்கி கட்டிய ரஜினிகாந்த்.. குளிரில் வாட்டி எடுத்த மணிரத்னம்.. - முரளி அப்பாஸ்

20 Years Of Aayutha Ezhuthu: 3 வெவ்வேறு கதைகள் இணைந்து கல்லூரி மாணவர் அரசியல்வாதியானால் ‘ஆயுத எழுத்து’

HBD Mohanlal: மல்யுத்த வீரர் முதல் சினிமா வரை..உச்சம் தொட்ட நட்சத்திரம் நடிகர் மோகன்லால் பற்றிய சுவாரஸ்ய கதை!

Dhanush: அட்ஜஸ்ட் செய்யாத ஐஸ்வர்யா.. தனுஷுடன் வாழ விரும்பும் குழந்தைகள்.. மாணிக்கம் நாராயணன்

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஃபரூக் பாட்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. பகாசூரன் என வித்தியான தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், நெற்றியில் பட்டை, குங்குமம், கழுத்தில் ருத்ராட்சை மாலை என கோயில் பூசாரி போல மிரட்டலாக இருக்கிறார் செல்வராகவன். இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது

இந்நிலையில், பகாசூரன் படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநராக இருந்து நடிகரான செல்வராகவனை மாறுபட்ட கோணத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

இதே நாளன்று தனுஷின் ‘வாத்தி’ படமும் வெளியாகிறது. செல்வராகவன் - தனுஷ் படங்கள் ஒரேநாளில் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தப் படம் வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி