தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetharaman: மகாலட்சுமியை எதிர்த்து வீட்டுக்குள் நுழையும் சீதா

Seetharaman: மகாலட்சுமியை எதிர்த்து வீட்டுக்குள் நுழையும் சீதா

Aarthi V HT Tamil

Mar 02, 2023, 12:40 PM IST

சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் சீதாராமன்.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Pasupathy: கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்டவர்! சென்னை மண்ணின் மைந்தன், தமிழ் சினிமாவின் மகா கலைஞன் பசுபதி

Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்

100வது படமாக தேர்வு.. கொடிக்கட்டி பறந்த சிவகுமார்.. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா இசை

Actress Shanthi Williams: ‘மோகன்லாலுக்கு நன்றியே கிடையாது.. என் புருஷன் இறுதிச்சடங்கிற்கு கூட அவன் வரல’ - சாந்தி பளார்

இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கொட்டும் மழையில் சீதா நின்றபடி காத்திருக்க மீரா சீதாவை இப்படி வீட்டை விட்டு வெளியே அனுப்புவது சரியில்லை என ராமிடம் பேச ராம் மனம் மாறி சீதாவை உள்ளே கூப்பிட போகும்போது அவனைத் தடுக்கும் மகாலட்சுமி ராமை வீட்டுக்குள் அனுப்பி வைக்கிறாள்.

சீதா வெளியில் நின்றபடி இருக்க மகாலட்சுமிக்கு எல்லோரும் போன் செய்து அழகான மருமகளை பார்த்திருக்கிறதா சொல்றாங்க வாழ்த்துக்கள் சொல்ல மகாலட்சுமி இன்னும் கடுப்பாகிறாள். உடனடியாக ராஜசேகருக்கு போன் பண்ணி உங்க பொண்ண வந்து கூட்டிட்டு போங்க என சத்தம் போட ராஜசேகர் சீதாவுக்கு போன் பண்ணி வருத்தப்படுகிறான்.

உடனே சீதா நீங்க கவலைப்படாதீங்க என்னுடைய வாழ்க்கையை நான் பாத்துக்குறேன் என ஆறுதல் கூறி போனை வைக்கிறாள். அதன் பிறகு சீதா மகாலட்சுமியை எதிர்த்து உள்ளே போக முடிவெடுக்கிறாள்.

சீதா தன்னுடைய துணிமணிகளுடன் உள்ளே போகும்போது ராம் அவளை தடுக்க சீதா இது நீங்க கட்டின தாலி தானே அப்போ நீங்க எங்கே இருக்கீங்களோ அங்கதான் நான் இருப்பேன் என சொல்லி மகாலட்சுமியின் கோட்டைக்குள் துணிச்சலாக அடி எடுத்து வைக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி