தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sachin With Suriya: சூர்யாவுடன், சச்சின் - வைரலாகும் புகைப்படம்

Sachin with Suriya: சூர்யாவுடன், சச்சின் - வைரலாகும் புகைப்படம்

Aarthi V HT Tamil

Feb 16, 2023, 11:49 AM IST

சூர்யாவும், சச்சினும் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகிறது.
சூர்யாவும், சச்சினும் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகிறது.

சூர்யாவும், சச்சினும் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகிறது.

நடிகர் சூர்யாவும், இந்தியக் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினும் மும்பையில் சந்தித்துக் கொண்டு உள்ளனர். இதில் இருவரும் கூலாக சூர்யா, சச்சின்போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Karthik Kumar: “நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் வெட்கப்பட போவதில்லை” - சுசித்ரா கருத்துக்கு கார்த்திக் குமார் பதிலடி

Salman Khan: மான் வேட்டை விவகாரம்; மன்னிப்புக்கேட்ட முன்னாள் காதலி; ‘மான கொன்னது சல்மான் அதனால அவன்தான்-பிஷ்னோய் சமூகம்

Saindhavi Prakash: ‘எல்லா நேரமும் அப்படியே இருக்க முடியாது.. நானும் மனுஷிதானே.. எனக்கும் வலிக்கும்..’ - சைந்தவி பேட்டி

Karthigai Deepam: ‘ரம்யா காதலனாக மாறும் கார்த்திக்.. விவரம் தெரியாமல் விளையாடும் தீபா’ - கார்த்திகை தீபம் அப்டேட்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பூஜை கடந்த ஆண்டு தொடங்கியது. இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அகரம் பவுண்டேஷனில் நடந்தது. இந்த படத்திற்கு, சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யாவின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. நடிகர் சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

 அங்கு தான் இவரது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில் கூட புதிதாக வாங்கி செல்ல நாய் குட்டியின் வீடியோவை வெளியிட்டு இருந்தார் ஜோதிகா.

இதே போல் சச்சினை அவரது இல்லத்தில் சந்தித்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஏ. ஆர். ரஹ்மானை இசைப்புயல் என தமிழில் குறிப்பிட்டு சச்சின் மகிழ்ச்சியாக இப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் உடன் நடிகர் சூர்யா எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி