தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rishab Shetty: தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரிஷப் ஷெட்டி

Rishab Shetty: தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரிஷப் ஷெட்டி

Aarthi V HT Tamil

Feb 21, 2023, 11:45 AM IST

காந்தாரா திரைப்படம் தாதா சாகேப் பால்கே விருதை வென்றுள்ளது.
காந்தாரா திரைப்படம் தாதா சாகேப் பால்கே விருதை வென்றுள்ளது.

காந்தாரா திரைப்படம் தாதா சாகேப் பால்கே விருதை வென்றுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த .காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.  சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்தது. அத்துடன் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

ட்ரெண்டிங் செய்திகள்

YouTuber Irfan: குழந்தை பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; இர்ஃபானை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! - சுகாதாரத்துறை

Suchitra issue: சுத்தி விட்ட சுசித்ரா.. ‘பட்டியலின சமூகத்த அப்படி ஆபாசமா’- கார்த்திக் மீது பாய்ந்த புகார்

Vadivukkarasi: ‘சிவா உங்கிட்ட வாய்ப்பு கேட்டதுக்கு நீ.. அட போப்பா..’ - ஓப்பனாக பேசிய வடிவுக்கரசி

Karthigai Deepam: ‘ரம்யாவிற்கு கார்த்திக் சட்டையா; வியர்வையை நுகர வைத்த காதல்; கடுகடுத்த தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

இந்நிலையில்,  2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதில், சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு விருது கிடைத்தது.

இந்த விருதை வென்ற மகிழ்ச்சியை ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

"மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா விருதைப் பெற்றதை நான் பெருமையாகவும், ஆசீர்வதிப்பதாகவும் உணர்கிறேன்" என்று அவர் கூறினார். 

மற்றொரு ட்வீட்டில், தன்னை நம்பியதற்காக ஹோம்பலே பிலிம்ஸுக்கு நன்றி தெரிவித்தார். காந்தாரா குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், மனைவி பிரகதி ஷெட்டி அனைவருக்கும் நன்றி கூறினார். 

இனிமேல் இன்னும் நல்ல படங்களில் நடிப்பேன் என்று கூறிய ரிஷப் ஷெட்டி, “தனக்கு கிடைத்த விருது தெய்வீக நடனக் கலைஞர்கள், கர்நாடக மக்கள், பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மற்றும் திங்கள்கிழமை மறைந்த பிரபல இயக்குநர் எஸ்.கே. கடவுளுக்குப் படைக்கிறேன்” என்றார்.

கந்தாரா திரைப்படம் தற்போது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கன்னட படங்கள் ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருவது அரிது. இப்போது அந்த வாய்ப்பு ‘கந்தாரா’ படத்துக்கு வந்துள்ளது.

ஹாலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உருவாகி வரும் இப்படம் மார்ச் 1 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ஆங்கிலத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி