தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prithviraj Health: வலியுடன் போராடி வருகிறேன் - பிருத்விராஜ் உருக்கம்

Prithviraj Health: வலியுடன் போராடி வருகிறேன் - பிருத்விராஜ் உருக்கம்

Aarthi V HT Tamil

Jun 28, 2023, 09:29 AM IST

நடிகர் பிருத்விராஜ் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை கூறி உள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை கூறி உள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை கூறி உள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் தற்போது விளையாத் புத்தா படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெயன் நம்பியார் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பி கேரளாவில் உள்ள மறையூரில் படமாக்கப்பட்டு வருகிறது. அங்கு அந்தரத்தில் தொங்கிய படி பிருத்விராஜ் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. இதில் எதிர்பாராத பிருத்விராஜுக்கு விபத்து ஏற்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

அவரது காலில் காயம் ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது காயம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், ரசிகர்கள் விரைவில் பிருத்விராஜ் குணமடைய வேண்டும் என அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் முதல் முறையாக தனது விபத்து குறித்து பிருத்விராஜ் பதிவ்

அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “விளையாத் புத்தா படத்தின் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கும்போது விபத்துக்குள்ளானேன். நல்லவேளையாக நிபுணர்கள் முன்னிலையில் எனக்கு ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்து வருகிறேன். பிசியோதெரபியும் செய்யப்படுகிறது. நான் வலியுடன் போராடுகிறேன். கூடிய விரைவில் திரும்பி வருவேன். என் உடல்நிலையில் அக்கறை காட்டுவது மட்டுமின்றி, என் மீது அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

பிருத்விராஜ் தற்போது இணைந்திருக்கும் பல பெரிய படங்களில் தற்போது விளையாத் புத்தா ஒன்றாகும். அதில் அவர் அவர் இரட்டை கடத்தல்காரராக நடிக்கிறார்.

மோகனன். ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய நாவலை அதே தலைப்பில் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. பாஸ்கரன் மற்றும் இரட்டை மோகனன் ஆகிய இரு கதாபாத்திரங்களைச் சுற்றி கதை நகர்கிறது. பாஸ்கரன் தனது வீடு முற்றத்தில் சந்தன மரத்தை வளர்க்கும் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். ​​இரட்டை மோகனன் அதை வெட்ட முடிவு செய்கிறார், இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான மோதலைச் சுற்றியே கதைக்களம் அமைந்து இருக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி