தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pathaan Collection: நான்கு நாளில் பதான் எத்தனை கோடி வசூல்?

Pathaan Collection: நான்கு நாளில் பதான் எத்தனை கோடி வசூல்?

Aarthi V HT Tamil

Jan 29, 2023, 12:40 PM IST

நடிகர் ஷாருக்கானின் பதான் பட நான்கு நாள் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ஷாருக்கானின் பதான் பட நான்கு நாள் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஷாருக்கானின் பதான் பட நான்கு நாள் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஷாருக் கான்,நடித்த பதான் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது. மிக வேகமாக ரூ. 300 கோடி கிளப்பில் படம் இணைந்து உள்ளது. வர்த்தக நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் பதானின் 4 ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 55 கோடியாகும். 

ட்ரெண்டிங் செய்திகள்

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

இப்படம் முதல் நாளிலேயே ரூ. 57 கோடியும், இரண்டாவது நாளில் ரூ 70.50 கோடியும், மூன்றாவது நாளில் ரூ 39.25 கோடியும் வசூலித்து உள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி விடுமுறை என்பதால் வசூல் அமோகமாக இருந்தது. அதன் பிறகு மூன்றாவது நாளில் சற்று சரிவு ஏற்பட்டது.

பதானின் 4 ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பாலிவுட் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். உலகளவில் பதான், மூன்று நாட்களில் 313 கோடிகள் (மொத்தம்) வசூலித்துள்ளது. மிக வேகமாக 300 கோடி வசூலித்த ஹிந்தித் திரைப்படம் (வெளிநாட்டிலும் இந்திய வசூல்).

முதல் மூன்று நாள் வசூல் அடிப்படையில் ஏற்கனவே கேஜிஎஃப் 2 மற்றும் பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை பதான் முறியடித்துள்ளார். இப்படம் வெளிநாடுகளில் ரூ. 49 கோடிக்கும் அதிகமாக வசூலாகும் என வர்த்தக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். அதாவது உலகம் முழுவதும் இதன் மொத்த தொகை ரூ. 420 கோடியைத் தாண்டியிருக்கலாம்.

ஜனவரி 25 ஆம் அன்று திரையரங்குகளில் வெளியான பதான் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கின் படம். இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இது முந்தைய பாலிவுட் படங்களின் அனைத்து மதிப்பெண்களையும் முறியடித்தது. மூன்று நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பாலிவுட் படங்களின் தொடக்க வார இறுதி சாதனைகளை முறியடித்தது.

சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தில், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே ஆகியோரும் நடித்து உள்ளனர். இந்தப் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகள் சூழ்ந்து உள்ளன. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி