தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayanthara: கனவு அலுவலகம்.. போயஸ் கார்டனில் பிரமாண்டமாக நயன்தாரா செய்யும் பக்கா பிளான்

Nayanthara: கனவு அலுவலகம்.. போயஸ் கார்டனில் பிரமாண்டமாக நயன்தாரா செய்யும் பக்கா பிளான்

Aarthi Balaji HT Tamil

Apr 09, 2024, 10:52 AM IST

நயன்தாரா தனது புதிய 'கனவு அலுவலகம்' படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்
நயன்தாரா தனது புதிய 'கனவு அலுவலகம்' படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்

நயன்தாரா தனது புதிய 'கனவு அலுவலகம்' படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்

நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து அலுவலகம் கட்டி வருகிறார் . இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Rajini on Vettaiyan: ஆன்மிக துறவியுடன் உரையாடல்! கூலி அப்டேட், வேட்டையன் ரிலீஸ் டேட் பகிர்ந்த ரஜினி - ரசிகர்கள் குஷி

Mamitha Baiju: எகிறி குதித்து வந்த ரசிகர்கள்! பாதுகாவலர்களால் தப்பித்த மமிதா - வைரல் விடியோ

Karthigai deepam: தீபா சைக்கோவாக மாரியது ஏன்?.. அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

Abhishek Raja: விவாகரத்தில் முடிந்த முதல் கல்யாணம்; காதலியை 2 வதாக கரம் பிடித்த பிக்பாஸ் அபிஷேக் ராஜா - விபரம் இங்கே!

தமிழில் பிரபல நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக ‘ஐயா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா. தனது இரண்டாவது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் . அதன் பிறகு மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

நயன்தாரா வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தாலும், அனைத்தையும் சந்தித்து மீண்டும் தனக்கான இடத்தை பிடித்தார். அவரது விடா முயற்சி நயன்தாராவை தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக மாற்றியது .

40 வயதிலும் இளம் நடிகைகள் போல் இளமையான தோற்றத்துடன் வலம் வரும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்து முடித்து உள்ளார். சில இந்தி படங்களிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியில் நயன்தாராவின் மார்க்கெட் அதிகரிக்கக் காரணம் கடந்த ஆண்டு வெளியான ‘ ஜவான் ’ படம் தான் .

பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை இயக்கிய இயக்குநர் அட்லீ , இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைத்து இருந்தார். மேலும் நயன்தாராவுக்கு முதல் பாலிவுட் படத்திலேயே ஷாருக் கானுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டமாக பார்க்கப்பட்டது. 

இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா சுமார் 1200 கோடி ரூபாய் வசூல் செய்தது மட்டுமின்றி தாதா சாகிப் பால்கே விருதையும் வென்று உள்ளார். இதனால் இந்தி திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கை ஓங்கி இருக்கிறது.

சினிமா துறையில் நடிப்பு, தயாரிப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் பிஸியாக இருந்தாலும், அவர் தனது கணவர் , குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பொறுப்பான இல்லத்தரசியாகவும் இருக்கிறார் . அவரும், அவரது கணவரும் அடிக்கடி படங்களில் கதை கேட்க வெளியே செல்வதா குழந்தைகள் பிரிந்து செல்வதாலும் அவர் தனது வீட்டில் புதிய அலுவலகம் கட்டி வருகிறார் .

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இந்த பிரமாண்ட அலுவலகத்தை கட்டி வருகிறார் . தற்போது இதன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

"எங்கள் கனவு அலுவலகத்தை வடிவமைத்து அதன் உருவாக்கத்திற்கான ஒரு பார்வையின் மந்திர பயணம். நீங்கள் சிறந்தவர், இது உண்மையிலேயே மறக்க முடியாதது மற்றும் இந்த இடத்தை ஒன்றாக உருவாக்கிய மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்" என்று நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி