தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  67 Years Of Allauddinum Arputha Vilakkum: பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பேன் இந்தியா படமாக வெளியாகி ஹிட்டான படம்

67 Years of Allauddinum Arputha Vilakkum: பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பேன் இந்தியா படமாக வெளியாகி ஹிட்டான படம்

Mar 29, 2024, 05:30 AM IST

தமிழில் வெளியான சிறந்த பேண்டஸி படங்களில் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்துக்கு தனியொரு இடமுண்டு. பேன் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது இந்த படம்.
தமிழில் வெளியான சிறந்த பேண்டஸி படங்களில் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்துக்கு தனியொரு இடமுண்டு. பேன் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது இந்த படம்.

தமிழில் வெளியான சிறந்த பேண்டஸி படங்களில் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்துக்கு தனியொரு இடமுண்டு. பேன் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது இந்த படம்.

அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற இந்த பெயரில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடித்து வெளியான பேண்டஸி படம் பற்றி பலருக்கும் தெரியும். ஆனால் இந்த படம் வருவதற்கு 22 ஆண்டுகளுக்கு முன்னரே இதே கதையில், இதே டைட்டிலுடன் அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டாராக இருந்த அக்கினேனி நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி இணைந்து நடித்து வெளியானது.

ட்ரெண்டிங் செய்திகள்

29YearsOfThirumoorthy:தேர்தலில் நிற்கும் லாரி டிரைவர்.. அவருக்குப் பின் நடக்கும் சதியில் இருந்து மீண்டால் ‘திருமூர்த்தி’

Vijay Fan: ‘விஜய் அண்ணா..’ பாசமாக அழைத்த ரசிகை.. சற்றும் கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்!

6 Years of Irumbu Thirai: அர்ஜுன், விஷால் இணைந்து நடித்து இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய படம்!

மாயாஜாலம்.. கூடுவிட்டு கூடு பாய்தல் கதை.. இரட்டை வேடத்தில் பிரபுவின் சின்ன வாத்தியார்!

பல தந்திர, மாயஜால காட்சிகளுடன் அமைந்திருந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. கருப்பு வெள்ளை படமான இதில் எஸ்வி ரங்காராவ், டிஎஸ் பாலையா, ராஜ சுலேச்சனா உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

அலாவுதீன் கதை

பாரசீக கதையான அலாவுதீன் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் வெளிவந்தது. இன்றும் நாம் இந்த கதையை புத்தகங்களில் வாசிக்கலாம். அலாவுதீன் பூதம் கேட்டதை எல்லாம் தரும் என சிறுவர்களுக்காக இந்த பூத கதை சொல்லப்பட்டது. இந்த படத்தில் பூதம் மட்டுமில்லாமல் காதலும் கலந்து சொல்லப்பட்டிருக்கும்.

படத்தின் திரைக்கதையை பொறுத்தவரை அலாவுதீன் கதையை அடிப்படையாக வைத்து அமைந்திருக்கும். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வெவ்வேறு தேதிகளில் வெளியான அப்போதைய பேன் இந்தியா படமாக அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் அமைந்திருக்கும்.

படத்தின் கதை அதன் நேட்டிவிட்டி குறையாத வண்ணம் பாக்தாத் நகரில் நடப்பது போன்று, அங்குள்ள இளவரசி மீது கதாநாயகன் காதல் வயப்படுவதும், தனது கிடைத்த அற்புத விளக்கை பயன்படுத்தி இளவரசியை கரம் பிடிப்பதும் என அமைந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் விளக்கும் அலாவுதீனுக்குத் தொல்லை தரும் வில்லன்களும் என சாகசங்கள் நிறைந்த படமாகவே இருக்கும்

பிளாக் அண்ட் சினிமாவான இதில் அப்போதையை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயஜால, தந்திர காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்து ஆச்சர்யமூட்டினார்கள். படம் வெளியான அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

முதலில் இந்த படம் தமிழில்தான் வெளியானது. இதன் பின்னர் தெலுங்கில் அலாவுதீன் அதபுத தீபம் என்ற பெயரில் தெலுங்கிலும், அலாதின் கா சிராக் தோ என்ற பெயரில் இந்தியிலும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து வெளியானது. படத்தை டி.ஆர். ரகுநாத் இயக்கியிருப்பார்

10 பாடல்கள்

ராஜஷ்வர் ராவ் மற்றும் ஹனுமந்த ராவ் ஆகியோர் இசையமைத்த இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம்பிடித்திருந்தன. பாடல் வரிகளை கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்பி சிவம், லக்‌ஷமன்தாஸ், வில்லுப்புதன் தமிழ் ஒளி ஆகியோர் எழுதிருந்தனர். படத்தின் பாடல்கள் அந்த காலகட்டத்தில் ஹிட்டாக அமைந்தன.

ரசிகர்களுக்கு புதுமையான அனுபவம்

படத்தின் கதை, திரைக்கதை மாயஜால காட்சிகள் மட்டுமில்லாமல் கதாபாத்திரங்களும் பாரசீக பகுதியை சேர்ந்த முஸ்லீம்களின் தோற்றத்தில் இருப்பதும், அவர்களின் நடை, உடை, பாவணை, உணவு என பின்பற்றுவதுமாக புது வித அனுபவத்தை தரும் விதமாக இருக்கும்.

இந்த அனுபவம் சற்றும் குறையாத வண்ணம் படத்தின் கதை, திரைக்கதை உள்ளிட்ட அனைத்தையும், சற்றே சினிமாவில் கொஞ்சம் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த பின்னர் 1979இல் ரஜினி - கமல் நடிப்பில் உருவாக்கியிருப்பார்கள்.

ஒரே பெயர், ஒரே கதை வெவ்வேறு நடிகர்களால் நடிக்கப்பட்ட படம் என்கிற சிறப்பு அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்துக்கு உண்டு. சினிமாவின் கருப்பு வெள்ளை காலத்திலேயே புதுமையான முயற்சியாக இருந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி