தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayanthara: ‘கெட்டவங்க கூட சேர்ந்தீங்க அவ்வளவுதான்; பணிவு முக்கியம்’-நயன் பளீச்!

Nayanthara: ‘கெட்டவங்க கூட சேர்ந்தீங்க அவ்வளவுதான்; பணிவு முக்கியம்’-நயன் பளீச்!

Feb 05, 2023, 11:59 AM IST

கல்லூரி காலங்களில் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நடிகை நயன்தாரா பேசியுள்ளார்
கல்லூரி காலங்களில் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நடிகை நயன்தாரா பேசியுள்ளார்

கல்லூரி காலங்களில் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நடிகை நயன்தாரா பேசியுள்ளார்

பிரபல நடிகையான நயன்தாரா சென்னை சத்யபாமா கல்லூரி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்; அவருடன் பிரபல நடிகர் ராணாவும் பங்கேற்றார்; நயன்தாராவை பார்த்த கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

Kamal Haasan: ‘தோனிய அப்படி கூப்பிடுறதுதான் சரியா இருக்கும்; டிக்சனரி புரட்டி புதுபெயர் கொடுத்த கமல்!-இது நல்லா இருக்கே!

நல்லவர்களோடு சேருங்கள்

தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் பேசிய நயன் தாரா “ நீங்கள் இந்த காலத்தில் எடுக்க கூடிய முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கானது.அது இந்த நேரத்தை இன்னும் அழகாக மாற்றுகிறது.

இந்த சமயத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள் என்பது மிக மிக முக்கியமான விஷயமாகும். இப்போது நீங்கள் நல்லவர்களோடு சேர்ந்து இருந்தீர்கள் என்றால், உங்கள் வாழ்கை மிகவும் நன்றாக இருக்கும். அதே நேரம் கெட்டவர்களோடு சேர்ந்தீர்கள் என்றால், உங்கள் வாழ்கை வேறுவிதமாக செல்ல வாய்ப்பு இருக்கிறது.

பணிவு முக்கியம்

கல்லூரியை விட்டு நீங்கள் வெளியே செல்லும் நீங்கள் வெளியே வெற்றியடைந்த நபராக, திறமையானவராக என எப்படி மாறினாலும், நீங்கள் பணிவாக இருக்க வேண்டும்; மக்களிடம் நீங்கள் அப்படி நடந்து கொள்ளும் பட்சத்தில், உங்கள் வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும்.

 

அதேபோல உங்கள் பெற்றோருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; இன்று நீங்கள் கல்லூரியில் ஜாலியாக இருக்கலாம். எல்லாம் ஓகே; ஆனால், அதே நேரம் தினமும் நீங்கள் அவர்களுக்காக 10 நிமிடத்தை செல்வழிக்க வேண்டும்; அதில் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியானது, பின்னாளில் உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். உங்களுக்கு இந்த போட்டி உலகத்தால் நிறைய அழுத்தம் கொடுக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த கணத்தில் வாழுங்கள்.” என்று பேசினார்.

நடிகர் ராணா பேசியது

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி