தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy 68: தளபதி 68 படத்துல இப்படி ஒரு ட்விஸ்டா? அப்போ மாஸ் தான்..

Thalapathy 68: தளபதி 68 படத்துல இப்படி ஒரு ட்விஸ்டா? அப்போ மாஸ் தான்..

Aarthi V HT Tamil

Aug 18, 2023, 11:00 AM IST

தளபதி 68 படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தளபதி 68 படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தளபதி 68 படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் புதிய படமான, லியோ அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இணைந்து பணியாற்றி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. லியோ படத்திற்கு பிறகு விஜய்யின் புதிய படம் தொடங்கவுள்ளது. படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே படத்துக்கான விளம்பரம் ஆரம்பித்துவிட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Rachna Banerjee: முதல் முறையாக எம்பி ஆக தேர்வான பார்த்திபன் பட ஹீரோயின்! மேலும் மூன்று பேர் வெற்றி

Sarathkumar: சரத்குமாருக்கு எதிராக தனுஷ் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு! காரணம் என்ன?

Aranmanai 4 OTT: ரூ.100 கோடி வசூல் அள்ளிய அரண்மனை 4.. எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?

Karthigai Deepam: பெங்களூர் போக பிளான் போட்ட ரம்யா.. தீபாவால் கார்த்திக் கொடுத்த ஷாக்

லியோ திரைப்படம் வெளியாகும் முன்பே ரூ.400 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகியுள்ளது. படம் வெளியானால் ரூ.550 கோடியை தாண்டுவிடும் என சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு விஜய் படம் வெளியாகும் முன்பே வியாபாரம் அதிகரித்துவிட்டது.

லியோ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படம் தளபதி 68 . ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். முதல் முறையாக இந்த கூட்டணி இணைந்து இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க உள்ளார். நாயகியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது. இருப்பிம்னும் இன்னும் படம் தொடர்பான விவரங்கள் வெளியில் எதுவும் அறிவிக்கவில்லை. படக்குழுவினர் அதை ரகசியமாக வைத்து உள்ளார். ஆனால், தளபதி 68 திரைப்படம் அரசியல் பின்னணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய், தளபதி 68 ஆவது படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல், பிகில், லியோ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரின் 68 ஆவது படத்திலும் இரட்டை வேடத்தில் வருவது ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி