தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thiruma: ‘ஏன் இந்த வக்கிர புத்தி..’ திருமா வீடியோவில் வைரலான நடிகை அகிலா ஆவேசம்!

Thiruma: ‘ஏன் இந்த வக்கிர புத்தி..’ திருமா வீடியோவில் வைரலான நடிகை அகிலா ஆவேசம்!

Dec 15, 2023, 09:41 AM IST

‘உங்கள் வீட்டிலும் பெண் இருப்பார்கள். அப்படி தான் அனைத்து பெண்களையும் பார்க்க வேண்டும்’
‘உங்கள் வீட்டிலும் பெண் இருப்பார்கள். அப்படி தான் அனைத்து பெண்களையும் பார்க்க வேண்டும்’

‘உங்கள் வீட்டிலும் பெண் இருப்பார்கள். அப்படி தான் அனைத்து பெண்களையும் பார்க்க வேண்டும்’

பிரபல நடிகையும் தொகுப்பாளருமான அகிலா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோ, பயங்கர ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அகிலா. அதில் அவர் கூறியிருப்பவை இதோ:

ட்ரெண்டிங் செய்திகள்

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

HBD Pasupathy: கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்டவர்! சென்னை மண்ணின் மைந்தன், தமிழ் சினிமாவின் மகா கலைஞன் பசுபதி

Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்

100வது படமாக தேர்வு.. கொடிக்கட்டி பறந்த சிவகுமார்.. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா இசை

‘‘ட்விட்டர், பேஸ்புக் எல்லாவற்றிலும் என்னுடைய வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நிறைய பேர் நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்ததாக கூறி வருகின்றனர். கடந்த டிசம்பர் 10, ஞாயிற்று கிழமை அன்று, உளுந்தூர்பேட்டையில் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவிற்கு, விருந்தினர் மற்றும் தொகுப்பாளராக நான் சென்றிருந்தேன். 

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து மருத்துவமனையை திறந்து வைத்தவர், தோழர் அண்ணன் திருமாவளவன். அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்ற வீடியோ தான் வைரலாகி வருகிறது. நான் வரவேற்புரை நிகழ்த்தி, திருமாவளவன் அவர்களை பேச அழைத்தேன். 

நான் பேசிய பிறகு தான், சிறப்ப விருந்தினர் வந்து பேச வேண்டும் என்கிற முறை தான் இருக்க வேண்டும். ஆனால், அங்கு தொண்டர்கள் நிறைய பேர் இருந்ததால், அவர்கள் அவசரஅவசரமாக வந்து மாலை அணிவிப்பது, சால்வை அணிவிப்பது என்று இருந்தார்கள். இதற்கிடையில் அவரை அப்படியே பேச அழைக்க முடியாது. அதனால் தான் அவர் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். 

அவர் ஒரு முக்கியத் தலைவராக இருக்கிறார், மனித உரிமை, சமூக நீதி, சம தர்மத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் மாமனிதர், எம்.பி., ஆகவும் இருக்கிறார். அவரை வெறுமனே, ‘திருமாவளவன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்’ என்று சொன்னார் நன்றாக இருக்காது. அதனால் தான் அவருக்காக அழகாக ஒரு உரை தயார் செய்து பேசினேன். நான் பேசியதை அவர் உற்று கவனித்துக் கொண்டிருந்தார். 

அதை வேறு விதமாக ட்ரோல் பண்ணி, அவரை கலங்கப்படுத்தும் விதமாக பரப்பி வருகின்றனர். நிறைய ட்ரோல் போவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இந்த மாதிரி விசயத்தை பரப்புவதற்கு பதிலாக, அவர் சொல்லும் நல்ல கருத்துக்களை பரப்பலாம். இவர் என்று இல்லை, எந்த பிரபலமாக இருந்தாலும், அவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை பரப்பலாம். தேவையில்லாமல் இந்த மாதிரி அசிங்கங்களை பரப்ப வேண்டியதில்லை. 

சில நொடி அந்த வீடியோ காட்சிகளை பார்த்த பலரும், என்னுடைய புடவை நிறத்தை பார்த்து விட்டு நான் விசிகவில் இணைந்து விட்டதாக நினைத்துக் கொண்டார்கள். அப்படி எதுவும் இல்லை. திருமாவளவனை நான் அந்த மேடையில் தான் சந்தித்தேன். மற்றபடி நான் எந்த கட்சியிலும் சேரவில்லை.

ஒரு ஆணை அசிங்கப்படுத்துவதாக நினைத்து உடன் இருக்கும் பெண்ணின் மாண்புக்கும் கலங்கம் விளைவிக்கிறார்கள். இப்படி செய்வதால், அந்த நபர்களை அசிங்கப்படுத்துகிறீர்கள் என்று இல்லை, உங்களின் வக்கிர புத்தி இதன் மூலம் வெளிப்படுகிறது. நீங்க யாரு என்பது தெரிகிறது. 

ஒருவரிடம் எந்த குறை இருந்தாலும், அவரிடம் என்ன நல்ல விசயம் இருக்கிறது என்பதை பார்த்து, குறைகளை விட்டுவிட வேண்டும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. தேடி எடுத்தாலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாத ஒரு மனிதர் மீது, கொள்ளை ரீதியாக அவரது நடத்தையை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அது உடன் இருக்கும் பெண்களையும் கலங்கப்படுத்துகிறது. 

அது யாரோ வீட்டு பெண் இல்லை, உங்கள் வீட்டிலும் பெண் இருப்பார்கள். அப்படி தான் அனைத்து பெண்களையும் பார்க்க வேண்டும். இந்த மாதிரி தவறான செயலை இதுக்கு அப்புறமாவது செய்யாமல் இருங்கள். இனிமேல் இது மாதிரியான தவறான வீடியோக்கள் பரவாது என்று நான் நம்புகிறேன்,’’

என்று அந்த வீடியோவில் அகிலா கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி