தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suriya Peyarchi: 3 ராசிகளுக்கு பணமழை உறுதி.. சனியும் சூரியனும் சேர்ந்து விட்டனர்

Suriya Peyarchi: 3 ராசிகளுக்கு பணமழை உறுதி.. சனியும் சூரியனும் சேர்ந்து விட்டனர்

Feb 23, 2024, 11:44 AM IST

சூரியனும் சனியும் சேர்ந்து யோகத்தை கொடுக்கின்ற ராசிகள் குறித்து காண்போம்.
சூரியனும் சனியும் சேர்ந்து யோகத்தை கொடுக்கின்ற ராசிகள் குறித்து காண்போம்.

சூரியனும் சனியும் சேர்ந்து யோகத்தை கொடுக்கின்ற ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் தலைவனாக திகழ்ந்து வருபவர் சூரிய பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மிகக் குறுகிய காலத்தை எடுத்துக் கொள்கிறார். ஒரு மாத காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. கடந்த மாதம் ஜனவரி 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசியில் நுழைந்தார். இந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் ஆகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனி பகவானின் ராசியாகும். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது சூரிய பகவானும் சனி பகவானும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை கொடுப்பார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றது பணவரவில் எந்த குறையும் இருக்காது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு பண வரவில்லை எந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி