தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிர்ஷ்டத்தை கொட்டும் ராகு கேது.. இந்த ராசிகளுக்கு யோகம் தொடங்கியாச்சு

அதிர்ஷ்டத்தை கொட்டும் ராகு கேது.. இந்த ராசிகளுக்கு யோகம் தொடங்கியாச்சு

Feb 16, 2024, 12:59 PM IST

Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர். இவர்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் மாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு முழுவதும் இருவரும் இதே நிலையில் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். நவகிரகங்களில் ராசி மாற்றம் மட்டுமல்லாது மற்ற அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு கேது கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அன்று நட்சத்திர மாற்றம் செய்தனர். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாறினார். இவர்களுடைய நட்சத்திர இடம் மாற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. திடீரென்று அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களை தேடி வரும். பேச்சு திறமையால் மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நீண்ட கால பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

ராகு கேது இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு வசதி உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள்.

ரிஷப ராசி

 

உங்களுக்கு ராகு கேது சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்வில் சேமிப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகரீதியாக முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உங்களுக்கு அமையும்.

மேஷ ராசி

 

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத்திலிருந்து தடைகள் அனைத்தும் விலகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி