தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Financial Problem: பணப் பிரச்னை, நிதி நெருக்கடி போக வேண்டுமா? இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்

Financial Problem: பணப் பிரச்னை, நிதி நெருக்கடி போக வேண்டுமா? இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்

Feb 23, 2024, 01:25 PM IST

நிதி, பண பற்றாக்குறை இருப்பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளலாம்
நிதி, பண பற்றாக்குறை இருப்பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளலாம்

நிதி, பண பற்றாக்குறை இருப்பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளலாம்

அனைத்து வயதினருக்கும் பணதேவையானது அத்தியாவசியமாக உள்ளது. ஜாதகத்தை மட்டும் வைத்து ஒருவரின் நிதி நிலைமையை தீர்மானித்து விட முடியாது. ஒருவரது நிதிநிலைமை சீராக இருக்க வாஸ்து சாஸ்திர முறைப்படி கூறப்படும் விஷயங்களை பார்க்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

புதன் மற்றும் சுக்கிரன் நிதிநிலை பெறுவதற்கான ஆதாரமாக கருதப்படுகிறது. இதனுடன் தைரியமும் தேவை. எனவே செவ்வாய் கிரகத்தை கிரகிக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் எந்த வேலையும் செய்தால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியாது.

பண பிரச்னையை சமாளிக்க ஜோதிட சாஸ்திரத்தின் படி என்ன செய்ய வேண்டும்

நாள்தோறும் காலையில் சூரிய உதயத்துக்கு பின்னர், சிறிய செம்பு பாத்திரத்தில் இருந்து கிழக்கு திசையில் உள்ள சிவப்பு மலர் செடிகளுக்கு 12 முறை தண்ணீர் விட வேண்டும். ஒவ்வொரு முறையும் சூரியனின் இரண்டு நாமங்களில் ஒன்றை உச்சரிக்க வேண்டும். இவ்வாறஉ தொடர்ந்து செய்வதன் மூலம் நித தொடர்பாக எந்த பிரச்னையும் இருக்காது. குடும்ப பெரியவர்களின் ஆதரவு கிடைப்பதோடு, நம்பிக்கையும் அதிகரிக்கும்.

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க செவ்வாய்யின் ஆசிர்வாதம் மிக முக்கியம். புதனுக்கான அதிபதியாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ லட்சுமிநாராயண சுவாமி ஆகியோர் உள்ளார்கள். குளித்தவுடன் குங்குமம், திருநீறு நெற்றியில் வைப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். குலதெய்வத்தை வணங்கிய பிறகு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

புதன் கல்விக்கு மட்டுமின்றி அறிவாற்றலுக்கும் அதிபதியாக உள்ளார். நிதி நிர்வாகத்துக்கு நுண்ணறிவு முக்கியமானது. எனவே தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது நல்லது. பணப்பிரச்னை அதிகரித்தால், அதற்கு உரிய ஹோமம் செய்ய வேண்டும்.

சுக்கிரன் திருமணம் உறவுகள் மட்டுமல்ல, வருமானத்தை பெருக்குவதற்கான வழிகளை பற்றியும் கூறுகிறார். சுக்ரனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ லட்சுமி. எனவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில், ஆனால் சூரிய அஸ்தமனத்துக்கு முன், ஸ்ரீ லட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். பண தட்டுப்பாடு அதிகமாக இருந்தால் ஸ்ரீசூக்த பூர்வக ஹோமம் செய்ய வேண்டும்.

ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்திருந்தால் பேச்சில் தூய்மை இருக்க வேண்டும். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவ வேண்டும்.. பண பற்றாக்குறை ஏற்பட்டால் ஸ்ரீ சரஸ்வதியை மல்லிகைப் பூ வைத்து வழிபட வேண்டும். இதன் காரணமாக நிதி பற்றாக்குறையும் குறைந்து நல்ல வருமானம் கிடைக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி