தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பான சிவராத்திரி: அறநிலையத்துறை உத்தரவு!

அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பான சிவராத்திரி: அறநிலையத்துறை உத்தரவு!

HT Tamil Desk HT Tamil

Feb 16, 2023, 12:16 PM IST

Mahashivratri 2023: அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு போட்டுள்ளார்.
Mahashivratri 2023: அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு போட்டுள்ளார்.

Mahashivratri 2023: அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு போட்டுள்ளார்.

அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி - சிறப்பாக கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 

சமீபத்திய புகைப்படம்

Thiruvathirai Nakshatram: ’நடராஜர் அவதரித்த நட்சத்திரம்!’ திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 14, 2024 05:39 PM

Lucky Rasis : 12 ஆண்டுக்கு பின் ரிஷபத்தில் வியாழன் சுக்கிரன் சேர்க்கை.. காதல் கசிந்துருகும் அதிர்ஷ்டம் யாருக்கு பாருங்க

May 14, 2024 02:13 PM

இந்த மூன்று ராசிக்கு மனைவியுடனான சச்சரவுகள் தீரும்.. வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்கும்..வேலையில் பதவி உயர்வு!

May 14, 2024 11:33 AM

Love Horoscope Today : காதலில் துரோகம் தனிமைக்கு வழிவகுக்கும்.. உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்!

May 14, 2024 08:42 AM

Today Horoscope : ‘பணம் பொங்கும்.. சேமிப்பில் கவனம்.. நிம்மதி நிச்சயம்’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

May 14, 2024 04:30 AM

Ashtama shani Luck: முதுகை பழுக்க வைக்கும் சனிபகவான்.. அலற வைக்கும் அஷ்டமசனி.. தப்பிக்க வழியே இல்லையா? - ஜோதிடர் பேட்டி

May 13, 2024 08:53 PM

சிவ பெருமானின் பெருமையை பறைசாற்றும் விதமாக வரும் 18 ஆம் தேதி சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.  இது  தொடர்பாக அத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,

‘‘சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வசதிகள், மருத்துவ முகாம்கள், கழிப்பறைகள், காவல்துறை பாதுகாப்பு முறையாக அளிக்கப்பட வேண்டும்.

கலைநிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும்போது அந்தந்த பகுதி கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,’’

என்று அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு போட்டுள்ளார். 

சிவராத்திரி விழாக்கள் இந்தியா முழுதும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தனியார் அமைப்புகளும், தனிநபர்களும் தங்கள் பகுதியில் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட தீவிர ஏற்பாடுகளை செய்தி வருகின்றனர். 

இந்நிலையில் அரசு தரப்பில் அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியிருப்பதால் சிவ பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி