தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ashtama Shani Luck: முதுகை பழுக்க வைக்கும் சனிபகவான்.. அலற வைக்கும் அஷ்டமசனி.. தப்பிக்க வழியே இல்லையா? - ஜோதிடர் பேட்டி

Ashtama shani Luck: முதுகை பழுக்க வைக்கும் சனிபகவான்.. அலற வைக்கும் அஷ்டமசனி.. தப்பிக்க வழியே இல்லையா? - ஜோதிடர் பேட்டி

May 13, 2024 08:53 PM IST Kalyani Pandiyan S
May 13, 2024 08:53 PM , IST

அஷ்டம சனியால் கடக ராசிக்காரர்கள் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அஷ்டம சனி என்பது, 10 ஏழரைச் சனிக்கு சமமான தீய விஷயங்களைச் செய்யும். காரணம் அது எட்டாமிடம் ஆகும்.

அஷ்டம சனியால் படாதபாடு பட்டுக்கொண்டிக்கும் கடகராசிக்காரர்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள் என்னென்ன என்பது குறித்து, பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “ அஷ்டம சனியால் கடக ராசிக்காரர்கள் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அஷ்டம சனி என்பது, 10 ஏழரைச் சனிக்கு சமமான தீய விஷயங்களைச் செய்யும். காரணம் அது எட்டாமிடம் ஆகும்.   

(1 / 5)

எட்டாம் இடமானது நஷ்டம், சேதாரம், அவமானம், கடன், நோய், வழக்கு, எதிரி, பகை, விபத்து, அறுவை சிகிச்சை, தண்டனை உள்ளிட்ட விஷயங்களை தரும். எட்டாம் இடத்தினுடைய இன்னொரு குணம் என்னவென்றால் பேராசை. ஆழம் தெரியாமல் இறங்கிவிட்டு மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்பது.   இது கடக லக்னத்திற்கும் பொருந்தும். இந்த காலத்தில் சில கடக ராசிக்காரர்கள் வீடு கட்டியிருப்பார்கள். சொத்து வாங்கி இருப்பார்கள். இருப்பினும், அவர்கள் இன்னொரு பக்கத்தில், மிக அதிதீவிரமான போராட்டத்தை சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் இருக்கும்.  

(2 / 5)

இப்படி பல விதமான கஷ்டங்களைத் தரும் அஷ்டம சனியில் இருந்து தப்பிக்க, நாம் செல்ல வேண்டிய கோயில்களை பார்க்கலாம். சில பேர் அஷ்டம சனி வந்தவுடன், அன்னதானம் வழங்குவது, திருநள்ளாறு சென்று சனி பகவானை வழி விடுவது, வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, மௌன விரதம் இருப்பது உள்ளிட்ட பலவிதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இருப்பினும் கூட, அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் நீங்கள் ஒரு விஷயத்தை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களையெல்லாம் செய்யும்பொழுது, அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்தான்.   

(3 / 5)

ஆனால் எந்த நோய்க்கு, எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு விதிமுறை இருக்கிறது அல்லவா? அந்த விதிமுறை படியே நாம் செயல்பட வேண்டும். கடக ராசியை விபரீத ராஜ யோக ராசி என்று அழைக்கிறோம். அதற்கு காரணம் இருக்கிறது. கடக ராசியை நீங்கள் லக்கினமாக பாவித்துக் கொள்ளுங்கள். அந்த ராசிக்கு 12 க்கு உடைய புதனுடைய நட்சத்திரம் ஆயில்யம் அங்கு இருக்கும். ராசிக்கு எட்டுக்குடைய சனி நட்சத்திரம் பூசம் அங்கு இருக்கும்.அந்த ராசிக்கு ஆறாம் இடத்திற்கு உடைய குரு பகவான் உடைய நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரம் அங்கு இருக்கும்.   

(4 / 5)

இங்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு உடைய அதிபதிகள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆகையால் தான் இந்த ராசியை விபரீத ராஜயோகம் பெற்ற ராசி என்று அழைக்கிறோம்.இந்த அஷ்டம சனியில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள, கும்பகோணம் நகரில் இருக்கக்கூடிய சோமேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமைச் செல்லுங்கள். அங்கு வழிபாட்டை முடித்து விட்டு, அதே நாளில் திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயிலுக்கு செல்லுங்கள். தொடர்ந்து திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். இந்த கோயில்களுக்குச் செல்லும் நீங்கள் அங்கு 11 விளக்குகளை ஏற்றி, பயபக்தியோடு வழிபடுங்கள்” என்று பேசினார். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்