Tamil News  /  Video Gallery  /  Indian Tricolour Flies High In Erstwhile Terrorist Hub Of J&k's Doda

Tallest National Flag: சும்மா அதிருதுல்ல! 100 அடி தேசியக்கொடியை ஏற்றிய ராணுவம்

10 March 2023, 21:53 IST Muthu Vinayagam Kosalairaman
10 March 2023, 21:53 IST
  • ஜம்மு காஷ்மீர் டோடா மாவட்டத்தில் டோடா விளையாட்டு மைதானத்தில் 100 அடி உயரத்தில் தேசிய கொடியை இந்திய ராணுவத்தினர் நிறுவியுள்ளனர். இந்த பகுதியில் பல முறை தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியே முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கையானது முற்றிலும் ராணுவத்தினரால் கட்டுப்படுத்தப்பட்டு, தீவிரவாக தாக்குதல்கள் இல்லாத பகுதியாக மாறியது. இந்த கொடி நிறுவும் நிகழ்வில் உள்ளூர்வாசிகள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் பங்கேற்றனர். அப்போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அர்பணிக்கும் விதமாக இந்த தேசிய கொடி நிறுவப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செனாப் பள்ளத்தாக்கு பகுதி அதிக உயரித்தில் பறக்கும் இரண்டாவது கொடியாக இது அமைந்துள்ளது. ஏற்கனவே 100 அடி உயர தேசிய கொடு கிஸ்த்வார் என்ற பகுதியில் கடந்த ஜூலை மாதம் பறக்கவிடப்பட்டது.
More