தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunities : தமிழக அரசில் வேலை! பெல் நிறுவனத்தில் பணி! ரூபாய் நோட்டு அச்சகத்தில் வாய்ப்பு! – விவரங்கள் உள்ளே!

Job Opportunities : தமிழக அரசில் வேலை! பெல் நிறுவனத்தில் பணி! ரூபாய் நோட்டு அச்சகத்தில் வாய்ப்பு! – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
Jul 30, 2023 10:50 AM IST

Job Opportunities : தமிழக அரசில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளன. ரூபாய் நோட்டு அச்சகத்தில் பணி ஆகிய 3 விவரங்கள் உள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

காலியிடம் - வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் உதவி பயிற்சி அதிகாரி (ஸ்டெனோகிராஃபி) 2, டெக்ஸ்டைல் துறையில் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5 என மொத்தம் 7 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி - ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஹேன்ட்லூம், டெக்ஸ்டைல் மேனுபேக்சரிங் டிப்ளமோ, ஸ்டெனோ பணிக்கு பிளஸ் 2 தட்டச்சுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது 01.07.2023 அடிப்படையில் பொதுப்பிரிவினர் 37 வயதுக்குள் இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழி

விண்ணப்பக் கட்டணம் – தேர்வுக்கட்டணம் ரூ.100, பதிவுக்கட்டணம் ரூ.150

விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.08.2023

மேலதிக விவரங்களுக்கு - www.tnpsc.gov.in என்ற இணை முகவரியை தொடர்புகொள்ள வேண்டும்.

பெல்' நிறுவனத்தில் சேர விருப்பமா

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் - இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (டிரைய்னி மெக்கானிக்கல் 6 டெக்னீசியன் 'சி' எலக்ட்ரானிக் மெக்கானிக் / ஃபிட்டர் 103, கிளார்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி - இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ, டெக்னீசியன் பணிக்கு ஐடிஐ, கிளார்க் பணிக்கு பி.காம்./பி.பி.எம்., முடித்திருக்க வேண்டும்.

வயது – 01.07.2023 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழி

விண்ணப்பக் கட்டணம் – ரூ.295.

எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள் – 08.08.2023

மேலதிக விவரங்களுக்கு - www.bet-india.in என்ற இணைய முகவரியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

ரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள வங்கி நோட்டு அச்சகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் - சூப்பர்வைசர் பிரிவில் 12 (பிரின்டிங் 8, கன்ட்ரோல் 3, ஐடி 1, அலுவலக உதவியாளர் 4, ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் 95 (பிரின்டிங் 27, கன்ட்ரோல் 45, ஆய்வக உதவியாளர் 15, மெக்கானிக்கல் 3, எலக்ட்ரிக்கல் 4, சிவில் 1 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி - தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது – 21.08.2023 அடிப்படையில், அலுவலக உதவியாளர் 28, சூப்பர்வைசர் 30, மற்ற பிரிவுக்கு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை – எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழி

விண்ணப்பக் கட்டணம் – பொதுப் பிரிவினருக்கு ரூ.600, பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ.200 ஆகும்.

விவரங்களுக்கு - www.hopdwa.ipmelt.com என்ற முகவரியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 21.08.2023

IPL_Entry_Point

டாபிக்ஸ்