தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Acid Attack: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சு- பாதிக்கப்பட்ட பெண் பலி

Acid Attack: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சு- பாதிக்கப்பட்ட பெண் பலி

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 29, 2023 11:15 AM IST

Coimbatore Crime: நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணவர் ஆசிட் வீசியதில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

ஆசிட் வீச்சு (கோப்புப்படம்)
ஆசிட் வீச்சு (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த சிவா. இவரது மனைவி கவிதா 33. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். கவிதா 2016 ல் பஸ்ஸில் பயணிக்கும் பயணிடம் 10 பவுன் தங்க நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த நிலையில் அந்த வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த மார்ச் 23ம் தேதி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்திருந்தார். கவிதா தனது இரு குழந்தைகளையும், கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில் நீதிமன்றம் வந்த கவிதாவிடம் சிவா வாக்குவாதம் செய்தார்.

பின் அவரை தொடர்ந்து சென்ற சிவா வழக்கு தொடர்பாக நீதிமன்ற வாசலில் காத்திருந்த கவிதாவிடம் மீண்டும் மீண்டும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை கவிதாவின் உடல் மேல் பரவலாக ஊற்றினார். இதில் ஆடைகள் எரிந்து கவிதா பலத்த காயமடைந்தார். இதனைக் கண்டு அருகில் இருந்த வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றனர். இதில் வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட்பட்டு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஆசிட் வீசிய சிவா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருநத வழக்கறிஞர்கள் அவரை விரட்டி சென்று பிடித்து அடித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த கவிதா உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்