தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Wild Elephant Encroached On Farmlands Near Palani

Palani: பழனியருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை - விவசாயிகள் வேதனை

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 09, 2023 01:32 PM IST

குணசேகரனுடைய விவசாய‌ நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று பயிர்களை நாசம் செய்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கணக்கன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு‌தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது கோம்பைப்பட்டி கிராமம். அங்குள்ள விவசாய நிலங்களில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள யானைகள், காட்டுப்பன்றிகள் அவ்வப்போது விவசாய‌ நிலங்களில்‌ புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. 

கோம்பைப்பட்டியில் குணசேகரன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்குச்சோளம், தென்னை மற்றும் வாழைப் பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குணசேகரனுடைய விவசாய‌ நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று பயிர்களை நாசம் செய்தது. இதனால் பயிர்கள்‌ அனைத்தும் சேதமானது. வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையால் அமைக்கப்பட்ட அகழிகள் அனைத்தும் தூர்ந்து போய் மண் மேடாக உள்ளது. இதன்காரணமாக விலங்குகள் எளிதாக உள்ளே புகுந்து பயிர்களை நாசம்‌ செய்கின்றன. காட்டுயானைகள் அட்டகாசம் குறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முன்பு விலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கே இதுவரை இழப்பீடு‌ தராத நிலையில், தற்போது மீண்டும் பயிர்களை யானைகள் நாசம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளையும், பயிர்களையும்‌ விலங்குகள் நாசம் செய்யாத வகையில் ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென‌ அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்