தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vellore: புறாக்களால் வந்த அக்கப்போர் - கணவனைப் பிரிந்த மனைவி

Vellore: புறாக்களால் வந்த அக்கப்போர் - கணவனைப் பிரிந்த மனைவி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 01, 2023 10:34 AM IST

புறாக்களின் தொல்லை காரணமாக கணவனை விட்டு மனைவி பிரிந்து சென்றார்.

புறாக்களின் தொல்லையால் பிரிந்த தம்பதி
புறாக்களின் தொல்லையால் பிரிந்த தம்பதி

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. புறாக்களின் தொல்லைகளை காரணம் காட்டி ஒரு தம்பதி பிரிந்துள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் வேலூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

அந்த மனுவில்," எனது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்த புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து தினமும் எச்சம் கழித்து விட்டு செல்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு பலமுறை கூறியும் அவர்கள் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.

புறாக்கள் எச்சம் கழிப்பதை சுத்தம் செய்யும் போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் என பயந்து என் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு என்னை பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வழிவகை செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்