தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  What Are The Job Opportunities Available For Women Find Here

பெரம்பலூர், வேலூரில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி – பெண்களுக்கு வாய்ப்பு

Priyadarshini R HT Tamil
Feb 13, 2023 12:53 PM IST

Job Opportunities: பெரம்பலூர் மற்றும் வேலூரில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து பயன்பெறலாம்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து, வேலூர் கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள விவரம், 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, காட்பாடி, வேலூர் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியுடை வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு மாதம் ரூ. 12,000 ஊதியம் வழங்கப்படும்.

இந்தப் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பும், கணினி தொடர்பான 6 மாத பயிற்சியும் பெற்ற 28 வயதுக்குட்பட்ட, குறைந்தபட்சம் 2 ஆண்டு தொகுதி ஒருங்கிணைப்பாளராக அனுபவம் பெற்றவராகவும், அதே வட்டாரத்தில் குடியிருப்பவராகவும் உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஒப்பந்த அடிப்படையிலான இந்தப்பணிக்கு வயதுவரம்பு தளர்வுகள் ஏதும் இல்லை. மேலும், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மூலம் நியமிக்கப்படுவதால் சுழற்சி முறையும் பொருந்தாது. விண்ணப்பதாரர்கள் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தங்கள் ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பின் பரிந்துரைக் கடிதம், தீர்மான நகல் ஆகிய வற்றை இணைக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான தேர்வுகள் வரும் 24ம் தேதி நடைபெறும். தகுதியுடைய பெண்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பங்களைப் பெற்று திட்ட இயக்குநர் மற்றும் இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் என்ற முகவரிக்கு 17ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் என்னும் முகவரிக்கு பிப்ரவரி 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்