தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update : தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..எங்கு தெரியுமா?

Weather Update : தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..எங்கு தெரியுமா?

Divya Sekar HT Tamil
Apr 11, 2023 01:03 PM IST

தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை - கோப்புபடம்
மழை - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று(ஏப்ரல் 11) தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வருகிற 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்