தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vao Suicide : கடன் பிரச்சனை.. வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த வி.ஏ.ஓ.. மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

VAO Suicide : கடன் பிரச்சனை.. வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த வி.ஏ.ஓ.. மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

Divya Sekar HT Tamil
Aug 11, 2023 12:16 PM IST

கடன் பிரச்சனையால் மதுவில் விஷம் கலந்து குடித்து வி.ஏ.ஓ. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் கலந்து குடித்து வி.ஏ.ஓ. தற்கொலை
விஷம் கலந்து குடித்து வி.ஏ.ஓ. தற்கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரை பரிசோதித்த போது அவரது சட்டை பையில் இருந்த ஆதார் கார்டை வைத்து அடையாளம் கண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் கடலூர் முட்லூரை சேர்ந்த தாமரைச்செல்வன் (39) என்பது தெரியவந்தது. கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியில் வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வந்ததும் திருமணமாகி தீபா கவுரி (28) என்ற மனைவியும் 1 ½ வயதில் மகன் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் கடன் வாங்கியதில் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பூச்சி மருந்தை மதுவுடன் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இதைதொடர்ந்து உடலை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கிருமாமாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் பிரச்சனையால் மதுவில் விஷம் கலந்து குடித்து வி.ஏ.ஓ. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்