தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vairamuthu: 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்கப்பேனாவை பரிசாக அளித்தார் வைரமுத்து!

Vairamuthu: 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்கப்பேனாவை பரிசாக அளித்தார் வைரமுத்து!

Pandeeswari Gurusamy HT Tamil
May 11, 2023 12:15 PM IST

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்த வைரமுத்து
மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்த வைரமுத்து

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் வைரமுத்து. தனது எழுத்தின் மூலம் பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ள இவர், சமீப காலமாக பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருந்த பதிவில்,

“ஒரு

தச்சுத் தொழிலாளியின் மகள்

மாநிலத் தேர்வில்

உச்சம் தொட்டிருப்பது

பெண்குலத்தின் பெருமை

சொல்கிறது

எப்படிப் பாராட்டுவது?

அண்மையில் நான்பெற்ற

தங்கப் பேனாவைத்

தங்கை நந்தினிக்குப்

பரிசளிக்கிறேன்

திண்டுக்கல் வருகிறேன்;

நேரில் தருகிறேன்

உன் கனவு

மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், மாணவி நந்தினியை தனது தங்கை நந்தினி என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த பலரும் உங்கள் பேத்தி வயது பெண்ணை தங்கை என்று சொல்லலாமா பேத்தி அல்லது மாணவி என்று பதிவிட்டிருந்தால் சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஒருவர். 

மற்றொருவர் தங்க பேனாவை நேரில் சந்தித்து கொடுப்பதற்கு பதிலாக கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர், மாணவிக்கு தங்கப்பேனாவை நேரில் பரிசளித்து வாழ்த்தினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்