தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Training At Nlc With Stipend Tomorrow Last Day To Apply

என்எல்சியில் உதவித்தொகையுடன் பயிற்சி – விண்ணப்பிக்க நாளை கடைசி

Priyadarshini R HT Tamil
Jan 30, 2023 12:22 PM IST

NLC Training : தமிழ்நாடு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் என்எல்சியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக என்எல்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 626 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Graduate Apprentices மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 318 

Mechanical Engineering - 73 

Electrical & Electronics Engineering - 81 

Civil Engineering - 25 

Mining Engineering - 42 

Instrumentation Engineering -12 

Chemical Engineering - 9

Computer Science and Engineering - 52 

Electronics & Communication Engineering - 10 

Pharmacist - 14 

கல்வித் தகுதி: 2020/2021/2022ம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology அல்லது B.Pharm படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை ரூ.15,028 வழங்கப்படும். 

Technician (Diploma) Apprentices மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 308 Mechanical Engineering - 83 

Electrical Engineering -82

Civil Engineering – 49 

Electronics and communication Engineering – 9 

Instrumentation Engineering – 10 

Computer Science and Engineering – 40

Mining Engineering – 35

கல்வித் தகுதி: 2020/2021/2022ம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை ரூ.12,524  வழங்கப்படும். 

வயது தகுதி – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

கால அளவு - இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள். விண்ணப்பிக்கும் முறை - இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORMல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். 

முகவரி: The General Manager, Learning and Development center, NLC India Limited, Neyveli - 607803. விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2023.

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் பயிற்சி பெற விண்ணப்பிப்போர் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்