தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hogenakkal Falls : சூப்பர்.. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி.. ஆனால் இதற்கு தடை!

Hogenakkal Falls : சூப்பர்.. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி.. ஆனால் இதற்கு தடை!

Divya Sekar HT Tamil
Jul 30, 2023 10:54 AM IST

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 ஒகேனக்கல்
ஒகேனக்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதியுண்டு. சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க புரியாகவும் இந்த ஒக்கேனக்கல் அருவி அமைந்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்குவந்து செல்வது வழக்கம். ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

கர்நாடக மாநில நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாட்டில் எல்லையான பிலிகுண்டுக்கு வந்து சேர்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரம் கனஅடியாக நீர் வந்துகொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

அத்துடன் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இந்நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் பரிசல் இயக்க தடை தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்