Top 10 News: நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர்-எதிர்க்கட்சியினர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர்-எதிர்க்கட்சியினர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Top 10 News: நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர்-எதிர்க்கட்சியினர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 13, 2024 09:39 PM IST

Top 10 news: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Top 10 News: நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர்-எதிர்க்கட்சியினர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்!
Top 10 News: நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர்-எதிர்க்கட்சியினர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

அன்னபூர்ணா உரிமையாளர் பேச்சு விவகாரம்

  • அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னித்துக் கேட்டார். அது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து கோவையில், வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார். அப்பொழுது கூறும்போது, தனது ஓட்டலில் ஒரு பெண் எம்.எல்.ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா? அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை. பேசும்போது நான் சாப்பிடாததை எல்லாம் அவர் கூறினார். அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை. வேண்டுமெனில் அவரையே நீங்கள் நேரடியாகக் கேட்கலாம்.’’ என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியில் ஃபோர்டு

  • தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை ஏற்றுமதிக்காக ஃபோர்டு நிறுவனம் தொடங்குகிறது. ஏற்கனவே 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கோவை பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓணம் பண்டிகையின் முக்கியமான மன்னராக கருதப்பட கூடிய மகாபலி மன்னரை வேடமணிந்த மாணவரை ஹெலிகாப்டர் மூலம் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். இது அங்கிருந்த மாணவர்கள் கல்லூரி ஆசிரியர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் பூ கோலமிட்டு மோகினி ஆட்டம், களறி போன்ற கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள், ஓணம் சேலை, வேஷ்டி சட்டை, வண்ண வண்ண புத்தாடை அணிந்து ஜமாப், சண்டைமேளம், சினிமா பாடல்களுக்கு உற்சாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டடினர்.
  • எடப்பாடி பழனிசாமி, 60 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று 1650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நானே இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். கொரோனா தொற்று காரணமாக ஓராண்டு காலம் தாமதமானது. அதிமுக ஆட்சியிலேயே 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றது. திமுக ஆட்சியில் மெல்ல மெல்ல நகர்ந்து ஆமை வேகத்தில் திட்டம் முடிவு பெற்றுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க வரப்பிரசாதமான திட்டம். ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயனடைய கூடிய திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு மணப்பூர்வமான மகிழ்ச்சி அடைகிறேன்.
  • திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் என்ற தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து அந்த காரில் கட்டு கட்டாக போலி 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தீயணைப்புத் துறையின் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் சங்கத்தேகத்தின் பெயரில் கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
  • அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மிரட்டியதும், அவமானப்படுத்தியதும், கோவை மக்களை மிரட்டி அவமானப்படுத்தியது போலதான். அங்கிருக்கும் தொழில் அமைப்பினர் இனி கேள்வி எழுப்ப முன் வருவார்களா. பெண் எம்எல்ஏவை அவமதித்து விட்டதாக கூறி பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார் வானதி சீனிவாசன். சாதி - மதம், ஆண்-பெண் இவற்றை வைத்து பிரித்தாளுவதே பாஜகவினரின் வேலை என்று கோவை நாடாளுமன்ற எம்.பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
  • குன்றக்குடியில் சண்முகநாதர் திருக்கோயிலுக்கு கடந்த 1971- ஆம் ஆண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த நகரத்தார் சுப்புலட்சுமி என்ற பெண் யானையை பரிசாக கொடுத்தார். குன்றக்குடி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பராமரிப்பில் யானை வளர்ந்து வந்தது. தற்போது சுப்புலெட்சுமி யானையின் தற்போது 53 வயதாகிறது. இந்நிலையில் நேற்று கோயிலின் அடிவாரத்தில் கட்டிக் கிடந்த யானை அப்பகுதியில் நேர்ந்த தீ விபத்தால் படுகாயம் அடைந்தது. தீ பரவியவுடன் யானை தலை தெரிக்க ஓடியுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கோயில் நிர்வாகத்திற்கும், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து யானையை மீட்டு கோயில் மடத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் யானை சுப்புலட்சுமி இன்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தது.
  • சென்னை வடபழனி 100 அடி சாலையில் தனது மனைவியுடன் சென்ற முதியவரின் பைக் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி மனைவி பொம்மி (55) பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் பெருமாள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உயர்த்த வேண்டிய அரசும், அதற்காக இயங்கக்கூடிய வேலைவாய்பு அலுவலகமும் வேலை வாய்ப்பை உருவாக்காமல் இளைஞர்களின் வாழ்வை வீணாக்குவதை கண்டித்தும், அமைந்துள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 90% வேலைவாய்பு வழங்காததை கண்டித்தும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி திமுக மற்றும் தொமுச சார்பில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொமுச அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட திமுகவினர் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தனது கணவரும் நடிகருமான அஜித்குமார் புதிய கார் வாங்கியதாக புகைப்படத்தை அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டா கிராம் பதிவில் வெளியிட்டுள்ளார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.