Tamil Top 10 News: TNPSC தலைவர் நியமனம் முதல் நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
Tamil Top 10 News: நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது, டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம், சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ்க்கு சீமான் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Evening Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.ஜாபர் சாதிக் தம்பி கைது
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் தம்பி முகமது சலீமை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது.
2.டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உள்ளது. அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க
3.நிதி மோசடி வழக்கு-தேவநாதன் யாதவ் கைது
நிதி மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர். பல்வேறு நபர்களிடம் இருந்து நிதியை பெற்று சுமார் 50 கோடி வரை நிதி மோசடி நடைபெற்றதாக தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ் புகார் எழுந்த நிலையில் பொருளாதார குற்ற பிரிவு போலீசார் நடவடிக்கை.
மேலும் படிக்க
4.சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ்! சீமான் கண்டனம்
சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். கஞ்சா வைத்திருந்தாரெனப் புனையப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் பிணை பெற்றுவிட்டப் பிறகும், அதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் குண்டர் சட்டத்தை செலுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு. சவுக்கு சங்கர் தவறாக பேசியதற்கு அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இந்தியத் தண்டனைச் சட்டமே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதனை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கருத்து.
மேலும் படிக்க
5.மிக கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மேலும் படிக்க
6.காவிரி நீரை முறையாக திறக்க கோரிக்கை
பருவமழை சீராக இருந்ததால் வரும் காலங்களில் காவிரி ஆற்றில் உரிய நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்.
7.மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்க
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
8.பெண் மருத்துவர் கொலை - சிபிஐக்கு மாற்றம்
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம்.
9.நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு
செபி தலைவர் மதாபியை பதவியில் இருந்து நீக்க கோரி வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்து உள்ளது.
10.ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு
வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது மளிகை கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு.
டாபிக்ஸ்