Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது! வெளியே வரவிருந்த நிலையில் நடவடிக்கை!-savukku shankar booked for the 2nd time under the goondas act - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது! வெளியே வரவிருந்த நிலையில் நடவடிக்கை!

Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது! வெளியே வரவிருந்த நிலையில் நடவடிக்கை!

Aug 12, 2024 08:22 PM IST Kathiravan V
Aug 12, 2024 08:22 PM , IST

  • சவுக்கு சங்கருக்கு கஞ்சா வந்தது எப்படி? என்பது குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் கூறி உள்ளனர். வடமாநிலத்தில் இருந்து கஞ்சா வழங்கிய சிலரை பிடித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேனியில் கஞ்சா வைத்து இருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

(1 / 7)

பத்திரிக்கையாளரும், யூடியூபரும் ஆன சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் தேனி போலீசாரால் கைது  செய்யப்பட்டு இருந்தார். அவருடன் அவரது உதவியாளர், கார் ஓட்டுனர் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. 

(2 / 7)

தேனி நகர காவல் ஆய்வாளர் உதயக்குமார் தலைமையிலான காவல்துறையினர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் வழங்கி உள்ளது. 

(3 / 7)

சவுக்கு சங்கருக்கு கஞ்சா வந்தது எப்படி? என்பது குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் கூறி உள்ளனர். வடமாநிலத்தில் இருந்து கஞ்சா வழங்கிய சிலரை பிடித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. 

(4 / 7)

புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டதற்கான உத்தரவு நகல் சிறையில் வழங்கப்பட்டு உள்ளது. 

(5 / 7)

யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.

(6 / 7)

சவுக்கு சங்கரின் தாயர் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் தனது மகன் சவுக்கு சங்கரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருப்பதாகவும், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்