Jabar Sathik Case: ’ஜாபர் சாதிக் மனைவியிடம் பணம் பெற்றேனா?’ பொய் சொல்வதே பொழப்பா! கிளர்ந்து எழுந்த இயக்குநர் அமீர்!
தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு Youtuber தனது Channelல் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார் சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்டவர்கள் என அமீர் அவேசம்!

ஜாஃபர் சாதிக் அவர்களின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு இயக்குநர் அமீர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
வெளிநாடுகளுக்கு போதை பொருட்களுக்கான மூலப் பொருட்களை கடத்திய புகாரில் சினிமா தயாரிப்பாளர் ஆன ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு ஏற்கெனவே கைது செய்து உள்ளது.
துளியும் உண்மை இல்லை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் சாதிக் அவர்களின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இந்த தகவல் அமலாக்கத்துறையினரிடம் இருந்து 4 வந்ததாகக் கூறி நேற்றைய முன்தினம் (23.07.24) அன்று தினத்தந்தி, தினமலர், News7 உள்ளிட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.