Tamil Top 10 News: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் முதல் இபிஎஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் வரை - டாப் 10 செய்திகள்!
Tamil Top 10 News: முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம், தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, இபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராகிறார் உள்ளிட்ட காலை டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Morning Tamil Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) அமெரிக்கா புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது உலகின் முன்னணி நிறுவனங்களுடன், பல்வேறு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.