தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Southern Railway Announces Of Special Train For Nellai And Thoothukudi

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போக ரெடியா?..சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 10, 2024 02:10 PM IST

Pongal Special Train: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில்
ரயில்

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும், தொடர் விடுமுறை நெருங்கும் சமயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், பண்டிகை தொடங்க சில மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிவிடும். அந்த வகையில்

ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்தது. வரும் 12 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களான பாண்டியன், பொதிகை, நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது. இதனால், ரயில்களில் முன்பதிவு செய்யமுடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனா்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், சென்னை, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,13,16 ஆம் தேதிகளில் இரவு 9.50 மணிக்கு சென்னை, தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06003) மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

ஜனவரி 12, 14, 17ம் தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, விருதுநகா், சிவகாசி,ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியது.

முன்பதிவில்லா சிறப்பு ரயில்:

இதேபோல் தாம்பரம் - தூத்துக்குடி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜனவாி 14,16 ஆம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு சென்னை, தாம்பரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06001) இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

ஜனவரி 15, 17 ஆம் தேதிகளில் காலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06002) இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்