TN Forest Dept: வழிதவறி வந்த குட்டி யானையை தாயுடன் சேர்த்த வனத்துறையினர்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tn Forest Dept: வழிதவறி வந்த குட்டி யானையை தாயுடன் சேர்த்த வனத்துறையினர்!

TN Forest Dept: வழிதவறி வந்த குட்டி யானையை தாயுடன் சேர்த்த வனத்துறையினர்!

Apr 07, 2024 11:41 AM IST Manigandan K T
Apr 07, 2024 11:41 AM IST

  • கோவை மாவட்டம் மேற்கு மலை தொடர்ச்சியை ஒட்டி அமைந்துள்ளது. யானை, மான், பன்றி, காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி வனத்தையொட்டிய பகுதிக்குள் வருவது வாடிக்கையானது. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவனூர் கிராமம் காப்புகாட்டிற்கு அருகே 3 மாத ஆண் யானை குட்டி கூட்டத்தில் இருந்து வழிதவறி வந்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைக்குட்டியை மீட்டனர். உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறப்பு யானை கண்காணிப்பு குழுவினர், தாய் யானையோடு சேர்க்கும் பணிக்காக அழைக்கப்பட்டனர். இதற்கிடையில், கோயம்புத்தூர் வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் மேற்பார்வையில் யானைக் குட்டியை கண்காணித்து, இளநீர், குளுக்கோஸ், லாக்டோஜன் ஆகியவற்றைக் கொடுத்தனர். குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது.

More