TamilNadu Weather Alert: ’இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களை வெளுக்க போகும் மழை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
TamilNadu Weather Alert: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள எச்சரிக்கையில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கும் என்றும், சில பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கபடாலம் என்றும் சிறிய சேதங்கள் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை விடுப்பு
முன்னதாக இன்று பிற்பகலில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையை விடுத்து இருந்தது.
தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி
மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இன்றைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த 6 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை
20.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர்
மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.08.2024 முதல் 24,08,2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலபகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
டாபிக்ஸ்