Tamil Top 10 News: சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து முதல் 5,191 கிலோ கஞ்சா அழிப்பு வரை - டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து, கனமழை எச்சரிக்கை, 5191 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு உள்பட டாப் 10 முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Afternoon Tamil Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு
2022ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான், அவரது பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மோதலை ஏற்படுத்துதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா?” என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு
தீமிதி திருவிழாவில் சிறுவனுக்கு தீக்காயம்
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே கோயில் தீமிதி திருவிழாவில், தீக்குழிக்குள் இறங்கிய சிறுவன் தவறி விழுந்து 50% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குழியில் இறங்க அச்சிறுவன் தயங்கிய நிலையில், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் விபரீதம்.
தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நீலகிரி, கோவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
'இந்தியாவுக்கு எதிராக சதி நடைபெறுகிறது'
ஹிண்டென்பெர்க் அறிக்கையின் மூலம் செபி தலைவர் மீது களங்கம் விளைவிக்க முயற்சி நடைபெறுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி இன்று இந்தியா மீதான வெறுப்பை வளர்த்துள்ளது என்றும் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,470-க்கும் ஒரு சவரன் ரூ.51,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தம்பதி தற்கொலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் குழந்தையின்மை மன உளைச்சலாம் உயர் மின் அழுத்த மின் கம்பியைப் பிடித்து தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். குமரேசன் (35) மனைவி புவனேஸ்வரி (28) இருவரும் இன்று காலை வீட்டின் மாடிக்கு சென்று அங்கு மின் கம்பத்தில் இருந்த மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9,000 போலீசார் பாதுகாப்பு
நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். இதையொட்டி, சுதந்திரன தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர்.
அதானி குழும பங்குகள் 3-5% சரிவு
செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பெர்க் நிறுவனம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, அதானி குழும பங்குகள் தொடக்க நேரத்தில் இருந்தே லேசான விற்பனையைக் கண்டதால், இந்திய பங்குகள் மற்றொரு வாரம் பலவீனமான குறிப்பில் தொடங்கின.
5,191 கிலோ கஞ்சா
தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி உட்பட 9 மாவட்ட காவல் நிலையங்களில் 495 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,191 கிலோ கஞ்சாவை நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையிலான காவலர்கள் தீயிலிட்டு எரித்தனர்.
டாபிக்ஸ்