CM MK Stalin: அம்மா உணவகங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு என்ன? - விபரம் இதோ..!
- சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 19) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 19) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
(1 / 6)
ஆய்வுக்கு பின், அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, உணவங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள், கருவிகளை மாற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
(2 / 6)
ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை நேரில் சென்று முதலமைசச்ர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
(3 / 6)
சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.
(4 / 6)
பல்வேறு அம்மா உணவங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை ரூ.7 கோடி செலவில் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
(5 / 6)
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
(6 / 6)
மேலும், 14 கோடி ரூபாய் செலவில் இந்த உணவங்களை புனரமைத்திடவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மற்ற கேலரிக்கள்