Parenting Tips: உங்கள் வீட்டு குட்டீஸ்க்கு மொட்டை போட சரியான வயது என்ன? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் - இதோ!
Baby's first hair cut: குழந்தை பிறந்த பிறகு முடியை முதல் முறையாக அகற்றி மொட்டையடிக்கும் பழக்கம் இந்தியாவில் ஒரு சடங்காகவே இருந்து வருகிறது. இருப்பினும் குழந்தைகளுக்கு முதல் முறையாக மொட்டை போடுவது பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலா
(1 / 6)
சாஸ்திரங்களின்படி, பிறந்த பிறகு ஒவ்வொருவருக்கும் 16 சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்து மதத்தில், குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு வயதிலும் செய்ய வேண்டிய சடங்குகள் சில உள்ளன. அதில் முதல் முறையாக முடி எடுத்தல் முக்கியமானதாக உள்ளது . முடி எடுத்தலை, சிரோமுண்டனம் என்று அழைக்கிறார்கள்
(2 / 6)
குழந்தைகளின் முடியை நீக்குவதால் பூர்வ பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அதே வேளையில் அறிவியலின் படி குழந்தைகளுக்கு முடிகளை அகற்றுவது மிகவும் முக்கியம். குழந்தைகளின் தலைமுடியை அகற்றுவதால் முடி அடர்த்தியாகவும் சிறப்பாகவும் வளரும் என்கின்றனர் மருத்துவர்கள்
(3 / 6)
ஆனால் எந்த வயதில் அல்லது எப்போது குழந்தைக்கு தலை முடி நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் பல்வேறு மாறுபாடுகள் இருக்கின்றன. சாஸ்திரத்தின்படியும், நம்பிக்கையின் படியும் ஒரு வயது முடிந்த பின்னரோ அல்லது அதற்கு முன்னதாகவே கூட முடி எடுக்கும் பழக்கமானது இருந்து வருகிறது
(4 / 6)
சில குடும்பங்களில், பிறந்த ஒரு வருடத்துக்குள் முடி அகற்றப்படுகிறது, மற்றவர்கள். இன்னும் சிலர் மூன்று வயதுக்கு பின்னரே முடி வெட்டுகிறார்கள். (pixel)
(5 / 6)
குழந்தையின் முடியை அகற்றுவதற்கான சிறந்த வயது 1 முதல் 3 ஆண்டுகள் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்போது குழந்தையின் தலையில் உள்ள மயிர்க்கால்களுக்கு அருகில் உள்ள சுரப்பிகள் மூடப்பட்டிருக்கும். எனவே முடி வெட்டுவதில் எந்த பிரச்னையும் இருக்காது எனவும் கூறுகிறார்கள்
மற்ற கேலரிக்கள்