Poverty in India : இந்தியாவில் அரசின் கூற்றுப்படி உண்மையில் வறுமை குறைந்து வருகிறதா? பொருளியல் நிபுணர்கள் கருத்து!
Poverty in India : இந்தியாவில் அரசின் கூற்றுப்படி உண்மையில் வறுமை குறைந்து வருகிறதா? பொருளியல் நிபுணர்களின் கருத்து என்ன?

சமீபத்தில் மத்திய அரசு, 2004-19 இடைப்பட்ட காலத்தில் 450 மில்லியன் இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக புள்ளி விவரம் வெளியிட்டது பொய்யானது என்றும், வறுமையை அளக்கும் அளவீடுகளை மாற்றியமைத்ததாலேயே இந்தப் பொய் மெய்யாக்கப்பட்டதாக 2023ம் ஆண்டுக்கான மல்காம் ஆதிசேசய்யா விருது பெற்ற பொருளாதார நிபுணர். உட்சா பட்நாயக் (JNU பல்கலைக் கழகம்) தெரிவித்துள்ளார்.
வறுமையை புரிந்துகொள்ள, முதலில் அது குறித்தான சரியான புள்ளி விவரங்களை திரட்ட வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் சூழலில், அதை சரியான அளவீடுகள் கொண்டு அளக்க வேண்டும்.
ஆனால், மத்திய அரசோ, இதற்கு முன்னர் சத்துணவு ஒருவருக்கு கிடைக்கும் அளவை கணக்கில்கொண்டு, வறுமையை அளந்த நிலை மாறி, அது இல்லாமல் வறுமையை அளக்கும் (Multi-Dimensional Poverty Index-MDI) அவலம் நடந்தேறியுள்ளது. மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்த மட்டுமே நடந்துள்ளது என்றும், வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைக்கொண்டு, வறுமையை அளக்காமல், மனிதர்களின் அடிப்படைத் தேவையான சத்துணவு கிடைக்கும் அளவைக்கொண்டு அளவீடு செய்வது சிறப்பாக இருக்கும் என்பதை அரசு அறிந்திருந்தும், அதைக் கொண்டு வறுமையை அளக்காமல் இருப்பது எப்படி சரியாகும்? என உட்சா பட்நாயக் கேள்வி எழுப்பியுள்ளார்.
