TNPSC Group 4 பயிற்சித் தொடர்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 1!
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை இன்று முதல் தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!

TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக, குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ.வுக்கு, பலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் புவியியல் பகுதியில் சராசரியாக 8 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, புவியியல் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.
சூரியக் குடும்பம்(Solar System): சூரியக் குடும்பம் என்பது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் ஆங்கிலத்தில் சொல்லும் சோலார் சிஸ்டம் என்ற சொல்லானது, ‘’Sol''என்ற லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது. சோலார் என்ற சொல்லானது ‘’சூரியக்கடவுள்’’ என்னும் அர்த்தத்தைத் சுட்டிக் காட்டுகிறது.
பெருவெடிப்பு(Big Bang): பெருவெடிப்பு என்பது ஒரு வெடிப்பு நிகழ்ந்ததன்மூலம், வானில் கணக்கற்ற நட்சத்திரங்களும், சிறு சிறுகோள்களும் உருவாகிய நிகழ்வு ஆகும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தது தான், பேரண்டம் (Universe) என அழைக்கப்படுகிறது. இதனை அண்டம் (Cosmos) என்றும் கூறுகின்றனர்.
