தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

Karthikeyan S HT Tamil
Aug 13, 2023 12:41 PM IST

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரணம் மற்றும் வாயு பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஸ், மருத்துவரின் பரிந்துரையின் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதனிடையே அமைச்சருக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் பெங்களூரு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதற்கிடையில், அமைச்சர் அன்பில் மகேஷிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று நலம் விசாரித்தார். அப்போது அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த நிலையில், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் குணமடைந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்