தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Alert: தேர்வு இல்லாம அரசுத்துறையில் வேலையா?வெளியான சூப்பர் அறிவிப்பு

Job Alert: தேர்வு இல்லாம அரசுத்துறையில் வேலையா?வெளியான சூப்பர் அறிவிப்பு

Marimuthu M HT Tamil
Aug 19, 2023 12:19 PM IST

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படும் வகையில், ஒரு பணியிட நிரவல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பணியிட அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசுப் பணியிட அறிவிப்பு (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு என்னவென்றால், ஒரு தற்காலிகப் பணிக்கு உண்டான அறிவிப்பு ஆகும். அது, தமிழ்நாட்டில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பிரிவில் வெற்றிடமாகவுள்ள Assistant Research Officer (Pharmacology &Toxicology) பணியிடத்தை நிரப்புவது பற்றிய அறிவிப்பைப் பற்றியதாகும்.

தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டால், அவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.20,000 தரப்படும் என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பாட்டுள்ளது. 

ஹோமியோபதித் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்:

காலிப்பணியிடத்தின் பெயர் - Assistant Research Officer (Pharmacology &Toxicology); காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை - 1

கல்வித்தகுதி:

மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Pharm(Pharmacology / Medical pharmacology)அல்லது M.Sc (Pharmacology / Medical pharmacology)ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். அதேபோல், lab கருவிகளை இயக்குவதில் இரண்டு ஆண்டுகள் முன்பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்: (01.07.2023க்குள்)

பொதுப்பிரிவினர் (OC) - 32 வயது,

BC, MBC மற்றும் DNC - 34 வயது,

SC, SCA, ST - 37 வயதுக்குள் இருக்கவேண்டும்.

எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவர் தெரியுமா?

முழுக்க முழுக்க மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியின் அடிப்படையிலும் மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு மூலம் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இந்த லிங்கில் https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N23084074.pdfஉள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து, முழுவதுமாக நிரப்பி வரும் 25.08.2023-மாலை 5 மணிக்குள் தபாலில் வந்துசேரும் வகையில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

Chief Scientific Officer/Director,

Research and Development Wing for ISM,

Indian Medicine and Homoeopathy Department,Arumbakkam,

Chennai -106 (Opposite to siddha Men’s Hostel) இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்