தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Neet Exam: ’+2 வினாத்தாள் கசிந்தால் தேர்வே வேண்டாம் என்று சொல்வீர்களா?’ நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

NEET Exam: ’+2 வினாத்தாள் கசிந்தால் தேர்வே வேண்டாம் என்று சொல்வீர்களா?’ நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Jun 28, 2024 01:25 PM IST

TN Assembly 2024 Live: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

NEET Exam: ’+2 வினாத்தாள் கசிந்தால் தேர்வே வேண்டாம் என்று சொல்வீர்களா?’ நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
NEET Exam: ’+2 வினாத்தாள் கசிந்தால் தேர்வே வேண்டாம் என்று சொல்வீர்களா?’ நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மானியக் கோரிக்கை விவாதம்

இன்றைய தினம் சிறு குறு நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை, மதுவிலக்கு, காவல்துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பதில் அளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்

நீட் தேர்வை அகற்ற கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அவர், “மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுத்த பழைய நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என மாண்புமிகு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள், பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் திரு.தேஜஸ்வி யாதவ் எனப் பலரும் நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்திக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நாம் எடுத்த முயற்சிகளை வெற்றியடைய செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றிடவும் தேவையான முன்னெடுப்பாக, இந்த மாமன்றம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் முதலமைச்சர் பேசி இருந்தார். 

நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முதலமைச்சரின் இந்த தீர்மானத்தை கண்டித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், நீட் தேர்வு வேண்டாம் என்று முதலமைச்சர் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து உள்ளார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கெனவே இதுபோன்ற தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் கிராமபுற மாணவர்களுக்காக 7.5% இட ஒதுக்கீடு தரப்பட்டது. 

தனியார் மருத்துவக் கல்லூரிகள் முன்பு ஒரு கோடி வரை வாங்கின. ஆனால் மோடி அரசு, ஏழை, எளிய மாணவர்களுக்கு எளிதில் இடம் கிடைக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. 

ஏற்கெனவே இவர் முதலமைச்சராக வந்த போது தீர்மானம் போட்டார்கள், ஆனால் இப்போது நடக்காத விஷயத்திற்காக மீண்டும் தீர்மானம் போடுகின்றனர். பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மையாக்க முயல்கின்றனர். ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு வேண்டும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என்று சொல்லி நாங்கள் வெளிநடப்பு செய்து உள்ளோம். 

நீட் தேர்வு தொடங்கியது முதல் எந்த குளறுபடியும் கிடையாது. இப்போது புகார் எழுந்த உடன் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் முன்பு நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாத்தாள் கசிந்து உள்ளது. அதனால் 12ஆம் வகுப்பு தேர்வையே ரத்து செய்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி உள்ளார். 

WhatsApp channel
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.