தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Crime: இன்ஸ்டாகிராம் விளம்பரம்.. ரூ.30,000 இழந்த கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் ட்விஸ்ட் - 3 பேர் கைது

Chennai Crime: இன்ஸ்டாகிராம் விளம்பரம்.. ரூ.30,000 இழந்த கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் ட்விஸ்ட் - 3 பேர் கைது

Karthikeyan S HT Tamil
May 12, 2023 10:59 AM IST

Chennai Crime: சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 3 பேர் கைது.
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 3 பேர் கைது.

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவரது மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். தம்பதிக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் மகாலட்சுமி (19) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

குடும்ப வறுமை காரணமாக மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதில் அவர், ரூ.30 ஆயிரம் வரை பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த மகாலட்சுமியின் தாய் சாந்தி, குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி பணத்தை கட்டி இழந்து விட்டாயே? என மகளை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி, கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.

தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக அமானுல்லா கான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் இந்த கும்பல் வேறு யாரையாவது ஏமாற்றி பணம் பறித்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்