தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Masini Elephant Story: பாகன்களை குறி வைக்கும் மசினி யானையின் கதை!

Masini Elephant Story: பாகன்களை குறி வைக்கும் மசினி யானையின் கதை!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 28, 2023 12:21 PM IST

Theppakadu Elephant Camp: ஒரு காலத்தில் குறும்புத்தனமாக தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றித் திரிந்த மசினி யானை கதை இதுதான்!

உயிரிழந்த பாகனும் மசினி யானையும்
உயிரிழந்த பாகனும் மசினி யானையும்

ட்ரெண்டிங் செய்திகள்

மசினி (கோப்புப்படம்)
மசினி (கோப்புப்படம்)

கடந்த 2007ம் ஆண்டு வழக்கம்போல் வனத்துறையினர் பணியில் இருந்த போது கார்குடி வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று தாயை பிரிந்து சுற்றி வருதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது மசினியம்மன் கோயில் அருகே குட்டி யானை ஒன்று மயக்க நிலையில் கிடந்தது. அதைப்பார்த்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு தொடர் சிகிச்சையால் யானை உடல் நலம் தேறியது.

மசினி பெயர் சூட்டல்

முதுமலை பழங்குடிகளின் குல தெய்வமாக கருதப்படுகிற மசினியம்மன் கோயில் அருகே இந்த குட்டியானை மீட்கப்பட்டதால் அதற்கு மசினி என பெயர் வைக்கப்பட்டது.

மாயாற்றங்கரையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்தே மசினி யானைக்கு பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த முகாமின் செல்ல குழந்தையாகவே

மசினி (கோப்புப்படம்)
மசினி (கோப்புப்படம்)

மசினி உற்சாகமாக வலம் வந்தது. அங்கிருந்த பாகன்களின் செல்ல குட்டியாகவே மசினி சுற்றி திறிந்தது.

விநாயகர் பூஜை

அப்போது யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் க்யூட்டாக மணி அடித்துச் சிறப்பு பூஜைகளை செய்த மசினி யானையின் புகைப்படங்கள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மசினி லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த பாகனம் மசினியும்
உயிரிழந்த பாகனம் மசினியும்

அதிலிருந்தே திசை மாறியது மசினியின் வாழ்க்கை.ஆனால் மசினி மாயாற்றங்கரையில் குளித்து விளையாடி கரும்பு வெல்லம் என்று விரும்பியதை தின்று கொண்டாட்டமாக இருந்த நிலையில் சமயபுரம் கோயிலுக்கு கொண்டு சென்ற பின் மசினியின் நடவடிக்கைகள் மாற துவங்கியது. யானைகளின் சொர்க்க பூமியாக கருதப்படும் முதுலையில் ஹாயாக சுற்றிய மசினி சமயபுரம் கோயிலில் மிக இறுக்கமாக இருந்தது.

 

சமயபுரம் கோயில் பாகன் பலி

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு திடீரென மதம் பிடித்த நிலையில் கஜேந்திரன் என்ற பாகனை மிதித்து கொலை செய்தது. அங்கிருந்த பக்தர்களை விட்ட தொடங்கியது பின் கதவுகள் பூட்டப்பட்டு யானை அடைக்கப்பட்டது. இதையடுத்து பிடிக்கப்பட்ட மசினி ஒரத்த நாடு கால்நடை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

மசினி உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமலும், படுத்து எழ முடியாமலும் தவித்து வந்தது.

நீதிமன்ற வழக்கு

இந்த நிலையில், யானையை முதுமலை முகாமுக்கு அழைத்துச் செல்லக்கோரி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளின்டன் ரூபின் என்பவர், உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து யானையை அதன் வாழ்விடமான முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி மசினி யானை தாய் வீடான முதுமலைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

கம்பீரமாக சமயபுரத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட மசினி யானை கொலை பழியோடு உடல் மெலிந்து முதுமலை திரும்பியது அங்கிருந்த பாகன்களை வேதனைக்கு உள்ளாக்கியது. இதையடுத்து தொடர் சிகிச்சை மற்றும் ஆரோக்யமான உணவு மாயாற்றின் தண்ணீர் போன்றவற்றால் மசினி மீண்டும் உடல் நலம் தேறி இயல்பு நிலைக்கு திரும்பியது.

முதுமலை முகாம் பாகன் பலி

 

உயிரிழந்த பாகன் பாலன்
உயிரிழந்த பாகன் பாலன்

இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று காலை வழக்கம் போல் உணவு அளிக்க பாகன் அருகே சென்றுள்ளார். அப்போது பாகனை மசினி யானை திடீரென தாக்கியது. இதில், பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே பாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் யானைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்