தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kalaignar Pen Memorial : மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Kalaignar Pen Memorial : மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Divya Sekar HT Tamil
Aug 01, 2023 12:23 PM IST

மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மெரினாவில் பேனா சின்னம்
மெரினாவில் பேனா சின்னம்

ட்ரெண்டிங் செய்திகள்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையொட்டி கருத்துக் கேட்புக் கூட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டன. சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பின. இந்நிலையில் நினைவுச் சின்னத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறையானது கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் மத்திய வனம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் நிபுணர் குழு வங்கக்கடலில் மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சூழலில் ராமநாதபுரத்தை சேர்ந்த நல்லதம்பி, நாகப்பட்டினத்தை சேர்ந்த சூசை அந்தோணி, மற்றும் சென்னை சேர்ந்த தங்கம் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பேனாச்சின்னம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். பொதுநல வழக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடலின் நினைவுச் சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் நலம் பாதிக்கப்படும் என்றும் எனவே மத்திய அரசு வழங்கிய அனுமதி மற்றும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யக்கோரி உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்னம் திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுநல மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . அத்துடன் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்