தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Goondas Act: 'இந்த சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது' - அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தல்

Goondas Act: 'இந்த சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது' - அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தல்

Karthikeyan S HT Tamil
Jun 25, 2023 11:42 AM IST

Goondas Act: தமிழக டிஜிபி-க்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

கைது (கோப்புபடம்)
கைது (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், குண்டர் தடுப்புச் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்கும் முன்பாக தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட எஸ்பிக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொது அமைதிக்கும், சட்டம் - ஒழுங்குக்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் கடுமையான குற்ற வழக்குகளில் மட்டுமே இந்த சட்டத்தை விதிவிலக்காக பயன்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். தவறாக பயன்படுத்தப்பட்டால் அது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் பெரும்பாலானவற்றில் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகிறது. எனவே, குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலுக்கு உட்படுத்த பரிந்துரைக்கும் முன்பு சம்மந்தப்பட்ட காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய விரிவான வழிமுறைகள் குறித்து தமிழக டிஜிபி, மாவட்ட எஸ்பிக்களுக்கு விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்புமாறும் அவர் அதில் அறிவுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்