தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Stalin : ஜூன் 5ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை.. நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்!

CM Stalin : ஜூன் 5ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை.. நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்!

Divya Sekar HT Tamil
Apr 28, 2023 01:00 PM IST

சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
முதல்வர் மு.க ஸ்டாலின் -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார்.

அதன்படி, சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு "Karunanidhi A Life" புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார். அதன்படி, சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். 

மருத்துவமனையை திறந்து வைத்த பின் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

முன்னதாக, முதல்வர் பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்படவிருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை ரத்தானது.

விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானம் புறப்பட தாமதம் ஆனதால் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு தில்லி செல்லும் விமானத்தில் முதல்வர் தில்லி புறப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்