தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vellore: தானாகப் பால் சுரந்த பசு - காம்பினில் பசை வைத்து ஒட்டிய விவசாயி

Vellore: தானாகப் பால் சுரந்த பசு - காம்பினில் பசை வைத்து ஒட்டிய விவசாயி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 14, 2023 12:23 PM IST

தானாகப் பால் சுரந்த பசு மாட்டின் மடி காம்பினை பசை வைத்து உரிமையாளர் ஒட்டி உள்ளார்.

பால் சுரந்த பசு
பால் சுரந்த பசு

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது அந்த மாட்டின் மடியில் இருந்து பசும்பால் தானாக வழிந்து உள்ளது. இதனைப் பார்த்த பசு மாட்டின் உரிமையாளர் நதியின் காம்பின் நுனியில் பசை வைத்து ஒட்டியுள்ளார். பசு தானாகப் பால் சுரக்கிறது. இதனை நிறுத்த முடியவில்லை என்பதால் டைப் வடிவிலான பசியை வைத்து அதன் உரிமையாளர் ஒட்டியுள்ளார்.

சில பசுமாடுகள் அதிகப்படியான பாலை சுரக்கும். அதனை வெளியேற்ற முடியாமல் தவிக்கும் பொழுது அதன் மடியில் இருந்து பால் தானாக வெளியேறும். இது இயல்பான செயல்களில் ஒன்றுதான்.

பசு மாட்டை விற்பனைக்காகக் கொண்டு வந்திருக்கும் பொழுது மடியின் அளவை பொறுத்து வியாபாரிகள் வாங்குவார்கள். எனவே அந்த பசு மாட்டின் மடியின் அளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக மடியின் நுனியில் பால் வழிந்தோடும் பொழுது அதனைப் பசை வைத்து உரிமையாளர் ஒட்டியுள்ளார்.

இவ்வாறு பசு மாட்டிற்குச் செய்வது கொடுமையான விஷயம். இதுபோன்ற செயல்களில் மற்ற உரிமையாளர்கள் ஈடுபடக் கூடாது என அங்கே வந்தவர்கள் தெரிவித்தனர்.

பசுமாடு தானாகப் பால் சுரந்த கதைகளை எத்தனையோ புராணங்களில் கேட்டிருக்கின்றோம். சிவலிங்கத்திற்குத் தானாகப் பசு மாடு பால் சுரந்த அபிஷேகம் செய்த புராணங்கள் இன்று பல உண்டு.

பாலை வெளியே அனுப்ப முடியாமல் மடியில் கட்டிக் கொள்ளும் பாலை பசு மாடு வெளியே சுரந்து விடும். ஒருவேளை கன்றுக் குட்டி இருந்தால் அதனைக் குடித்து விடும். காலை மாலை என இரு வேலையும் பால்காரர்கள் பாலை கறந்து விட்டுச் சென்று விடுவார்கள்.

இப்படி எந்த சூழ்நிலையும் அமையாத பசுமாட்டுக்குக் கட்டாயம் மடி கட்டிக் கொள்ளும். அதனால் பசு மாட்டிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக் கூட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாகவே பசு மாடுகள் பால் கட்டிக் கொண்டால் அதனை வெளியே சுரந்து விடுகிறது.

தானாகப் பால் சுரந்த பசு மாட்டின் மடியைப் பசை வைத்து ஒட்டிய உரிமையாளரின் செயலை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்