தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Teachers Counselling : நிறுத்தப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

Teachers Counselling : நிறுத்தப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

Priyadarshini R HT Tamil
May 12, 2023 12:36 PM IST

Teachers Coselling : மே 15 முதல் 26ம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆசிரியர்கள் இதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையில் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.

இந்த சூழலில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது.

மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், கடந்த 4ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு (தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி) நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி மாறுதலுக்காக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் மாறுதல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரிதாக எழுந்துள்ளது.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்